Recent Post

6/recent/ticker-posts

2026 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் / GST Collections for August 2026

2026 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் / GST Collections for August 2026

மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் சுமார் 15 சதவீதம் அதிகரித்து, வரலாற்றுச் சாதனையாக ரூ. 1,99,853 கோடியை (சுமார் ரூ. 2 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு (2025) இதே ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ரூ. 1,74,116 கோடியுடன் ஒப்பிடும்போது, இது 14.8 சதவீத மகத்தான வளர்ச்சியாகும். ஆகஸ்ட் மாதத்தில் மொத்த மத்திய ஜிஎஸ்டி (CGST) வசூல் ரூ.38,413 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (SGST) வசூல் ரூ.46,316 கோடியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) வசூல் ரூ.1.15 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

வரி ரீஃபனண்ட 68 சதவீதம் அதிகரித்து ரூ.31,795 கோடியை எட்டியுள்ளது. உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மூலமான ஜிஎஸ்டி வருவாய் 9.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.37 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

இறக்குமதி மூலமான மொத்த ஜிஎஸ்டி வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.62,604 கோடியாக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel