ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷின்யான் ஆகியோரைப் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்காக அண்டை நாடுகளை மீண்டும் ஒருமுறை கடுமையாகச் சாடினார்.
பாகிஸ்தானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், ஆள்சேர்ப்பு, தீவிரமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் ஆகியவற்றின் முழுமையான சூழலமைப்பையும் தகர்க்க வேண்டும் என்று கூறி, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி அவர் பேசினார்
%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%202026%20Shanghai%20Cooperation%20Organization%20(SCO)%20Summit%202026.jpg)

0 Comments