Recent Post

6/recent/ticker-posts

2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Hike in Minimum Support Price (MSP) for Rabi Crops for the 2027-28 Marketing Season

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகள், தங்களது விளைப் பொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்யும் வகையில், 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அதிகபட்சமாகக் குங்குமப்பூ பயிர், குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.675 என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேப்சீட், கடுகு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.413 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மசூர் பருப்பு, பார்லி, கொண்டைக்கடலை, கோதுமை ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, முறையே, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.390, ரூ.136, ரூ.83, ரூ.25 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel