Recent Post

6/recent/ticker-posts

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Hike in PF Wage Ceiling to ₹25,000

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Hike in PF Wage Ceiling to ₹25,000

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (PF) திட்டத்தில் கட்டாயமாக சேர்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பை தற்போதைய 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய விதிகளின்படி, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை அடிப்படை சம்பளம் பெறுவோர் பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் கட்டாயமாக சேர வேண்டும்.

இதற்கு மேல் சம்பளம் பெறுவோர் விருப்பத்தின் பேரில் சேரலாம். 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இந்த விதி கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது.

தற்போது 15,000 ரூபாய் சம்பள வரம்பின் அடிப்படையில், பணியாளர் 12 சதவீதமாக 1,800 ரூபாய் பங்களிப்பு செய்கிறார். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பை வழங்குகிறது. இதில், 3.67 சதவீதம் பி.எப். கணக்கிலும், 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் செலுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel