Recent Post

6/recent/ticker-posts

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister Vijay Launches 'Perunthalaivar Kamarajar Breakfast Scheme'

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister Vijay Launches 'Perunthalaivar Kamarajar Breakfast Scheme'

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கி வைத்த முதல்வரின் காலை உணவுத் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என த.வெ.க அரசு அறிவித்திருந்தது.

இதற்காக 2026- 2027 ஆம் நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.

இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய், செவ்வாய்கிழமை தொடங்கி வைத்தார். 

சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்த அவர் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel