Recent Post

6/recent/ticker-posts

பட்டணப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்த அரசாணை வெளியீடு / Government Order Issued for New Secretariat Complex at Pattinapakkam

பட்டணப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்த அரசாணை வெளியீடு / Government Order Issued for New Secretariat Complex at Pattinapakkam

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 3 ஆம் தேதி (03.09.2026) அன்று சட்டமன்ற விதி 110-இன் கீழ், சென்னையில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, பட்டணப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான மொத்தம் 25.55 ஏக்கர் நிலங்கள் புதிய கட்டிட வளாகம் கட்டுவதற்காக அடையாளம் காணப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகக் கட்டிட வளாகம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மதிப்பீடுகளுடன் சேர்த்து மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதற்கான கட்டிடக் கலை ஆலோசனை நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஆரம்ப மற்றும் இறுதி கட்ட கட்டிட வரைபடங்கள் மற்றும் வடிவமைப்புகளை இறுதி செய்வதற்கும் மூன்று பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel