முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில், முதலாம் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம். உலகளவில் முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமாக விளங்குகிறது.
மருந்தகச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் துறைகளில் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre -GCC) இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்துள்ளது.


0 Comments