நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல் முதல் ஜூன் வரை), தமிழ்நாடு 5.95 பில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்துள்ளதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவிலே அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழ்நாடு 30% பங்கு வகிக்கிறது.
ஜப்பானின் முன்னணி நிறுவனமான MUFGயிடமிருந்து, தமிழ்நாட்டின் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வந்த பாரிய முதலீடே இந்த உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
கடந்த 2025-26 ஆம் நிதியாண்டின் இதே ஏப்ரல் - ஜூன் காலாண்டில் தமிழ்நாட்டின் அந்நிய முதலீடு 2.7 பில்லியன் டொலராக இருந்துள்ளது.
4.22 பில்லியன் டொலர்களுடன் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், டெல்லி 2.67 பில்லியன் டொலர்களுடன் 3வது இடத்திலும், கர்நாடகம் 2.11 பில்லியன் டொலர்களுடன் 4வது இடத்திலும் மற்றும் குஜராத் 1.30 பில்லியன் டொலர்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.


0 Comments