பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சிறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சி நிதியை அமைப்பதற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்ய இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் 28-வது பத்தியில் குறிப்பிட்டபடி, நாட்டின் சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கு வளர்ச்சி சார்ந்த மூலதனத்தை ஊக்குவிப்பதையும், உற்பத்தி, சேவைகள், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட துறைகளில் இந்திய நிறுவனங்களைச் சாதனையாளர்களாக திகழச் செய்வதையும் இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏற்கனவே, பங்கு மூலதன ஆதரவை வழங்கக் கூடிய நிதிகள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சி சார்ந்த பங்கு மூலதனத்தில் ஒரு இடைவெளி காணப்படுகிறது.


0 Comments