பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் தலைவராகத் தொடர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு வாழ்த்துத் தெரிவித்து மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. குஜராத்தின் வெற்றிகரமான முன்முயற்சிகளைத் தேசிய அளவில் பிரதமர் திரு மோடி எவ்வாறு முன்னெடுத்துச் சென்றார் என்பதை இத்தீர்மானம் விவரிக்கிறது.
ஒளிமய கிராம திட்டத்தின் கீழ், வேளாண் பணிக்கான தனி மின்சார விநியோகத் திட்டம் தேசிய அளவில் பின்பற்றப்பட்டது மூலம் குஜராத்தின் அனுபவம் நாடு முழுவதும் விரிவுபடுத்தியது குறித்து தீர்மானத்தில் இடம்பெற்றது.
பிரதமர் திரு மோடியின் ஏழைகள் மீதான இரக்கம் கண்ணியமாக மாறுகிறது குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. சுமார் 60 கோடி மக்கள் வங்கி கணக்குகள், 4 கோடிக்கும் அதிகமான வீடுகள், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறியது ஆகியவை பிரமரின் தனிப்பட்ட புரிதல் எப்படி பொதுச்சேவையாக மாறி மக்களுக்கு கண்ணியத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து தீர்மானத்தில் விளக்கப்பட்டது.


0 Comments