Recent Post

6/recent/ticker-posts

வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் / Chief Minister Vijay Launches 'Vetri Payanam' Scheme

வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் / Chief Minister Vijay Launches 'Vetri Payanam' Scheme

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தின் விரிவாக்கமான 'வெற்றி பயணம்' திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் தொடக்க விழாவின் போது, முதலமைச்சர் விஜய் நேரில் பேருந்தில் ஏறி அதிரடி பயணம் மேற்கொண்டார்.

அப்போது, பேருந்தில் பயணித்த பெண் பயணிகளுக்கு அவரே நடத்துநராக மாறி, மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவி மூலம் கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.

மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் இத்திட்டம் பொருந்தும்.

7 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்பட உள்ள 12,692 பேருந்துகளில் தினசரி 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன் பெறுவார்கள்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel