Recent Post

6/recent/ticker-posts

NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது / NVS-03 Satellite Successfully Placed in Orbit

NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது / NVS-03 Satellite Successfully Placed in Orbit
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV-F18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2,250 கிலோ எடை கொண்ட அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான NVS-03, திட்டமிடப்பட்ட புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

NVS-03 என்ற இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பின் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும்.

இது இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) அல்லது நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் (NavIC) மூலம் வழங்கப்படும் வழிகாட்டு சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஏற்கனவே உள்ள L5 மற்றும் S அலைவரிசை சமிக்ஞைகளுடன், L1 சமிக்ஞையையும் கொண்டுள்ளது. இது இந்திய நிலப்பரப்பு மற்றும் இந்திய எல்லைகளில் இரந்து சுமார் 1,500 கி.மீ. சுற்றளவு கொண்ட பிராந்தியம் வரை தனது சேவையை வழங்கும்.

நேவிக் (NavIC) என்பது இந்தியாவின் சுதந்திரமான வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பாகும். இது இந்தியாவிலும், இந்திய நிலப்பரப்பில் இருந்து சுமார் 1,500 கி.மீ. தொலைவு வரையிலான பிராந்தியத்திலும் உள்ள பயனர்களுக்கு துல்லியமான இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேரத்தை கண்டறியும் (PNT - Position, Navigation, and Timing) சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel