மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, புதுதில்லியில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனமான ஐஐசிஏ ஏற்பாடு செய்திருந்த, பெருநிறுவன சமூகப் பொறுப்பு குறித்த மூன்றாவது தேசிய மாநாட்டையும் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
2026 அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் இந்த இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பின் தன்மைகளை மறுபரிசீலனை செய்தல்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


0 Comments