தென்மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப்புயலுக்கு இந்திய அரசு பரிந்துரைத்த 'முரசு' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 2-ம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், நெல்லூர்- நர்சபூர் இடையே பலத்த காற்றுடன் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு, மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது.


0 Comments