Recent Post

6/recent/ticker-posts

12வது பாதுகாப்புத்துறை கண்காட்சி / 12th DEFENCE EXPO 2022

  • பெருமைக்கான பாதை எனும் பெயரில் 12வது ஆண்டாக பாதுகாப்புத்துறை கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இரு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்துக்கு வந்துள்ளார்.
  • இந்த முறை பாதுகாப்புத்துறை கண்காட்சியில், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் ஸ்டால்கள் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புத்துறை கண்காட்சியில் முதல்முறையாக இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. 
  • வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் செயல்படும் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து நடத்தும் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
  • இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் தயாரித்த ஹெச்டிடி-40 ரக பயிற்சி விமானத்தை வெளியிட்டார். இந்த விமானம் பயிற்சி பைலட்களுக்கு உதவியாகவும், அவர்களுக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்கள் மூலம் விண்வெளியில் பாதுகாப்புப் படைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்துடன் 'மிஷன் டெஃப்ஸ்பேஸ்' பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல் குஜராத்தில் தீசா விமானப் படை நிலையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • பாதுகாப்புத்துறை தளவாடங்கள், கருவிகளை உருவாக்கும் 7 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவாகவும், இந்த பாதுகாப்புத்துறை கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் 451 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் செய்யப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel