மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அக்டோபர் 18, 2022 அன்று ராணுவ கண்காட்சி 2022-ல் கலந்து கொள்வதற்காக ருவாண்டா, அர்மேனியன் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன், இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ருவாண்டா பாதுகாப்புத்துறை அமைச்சர் மேஜர் ஜெனரல் ஆல்பர்ட் முராசிரா, அர்மீனியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு சுரேன் பாபிக்யான் மற்றும் மாலத்தீவுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி மரியா அகமது தீதி ஆகியோரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது, அந்தந்த நாடுகளுடன் பரஸ்பர நன்மை பயக்கும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது
0 Comments