Recent Post

6/recent/ticker-posts

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் - செப்டம்பர் மாதம் 2022 / NATIONAL UNEMPLOYMENT RATE - SEPTEMBER 2022

  • செப்டம்பரில், வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், வேலைவாய்ப்பின்மை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் சரிவை சந்தித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சி.எம்.ஐ.இ) இயக்குநர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார். 
  • சி.எம்.ஐ.இ அமைப்பின் தரவுகளின்படி, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறிப்பிடும்படியாக குறைந்துள்ளது. 
  • கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஒரே மாதத்தில் 1.84 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்டில் 7.68 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 5.84 சதவீதமாக குறைந்தது. 
  • அதேநேரத்தில், இந்தாண்டு பிப்ரவரி முதல் வேலைவாய்ப்பின்மை விகிதம் (ஜூலை தவிர) தொடர்ச்சியாக 7 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
  • ஆகஸ்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம், ஓராண்டு இல்லாத அளவுக்கு உச்சபட்ட அளவாக 8.3 சதவீதமாக பதிவாகியது. கிராமங்களை போலவே, நகர்ப்புறங்களில், இதே மாதிரியான போக்கு காணப்படுகிறது. 
  • ஆகஸ்டில் 9.57 சதவீதமாக அதிகரித்த வேலைவாய்ப்பின்மை விகிதம், செப்டம்பரில் 7.70 சதவீதமாக சரிந்துள்ளது. கூடுதலாக, 80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக பொருளாதார நல்ல நிலையில் இருப்பதை காட்டுகிறது.
  • மாநிலங்கள் வாரியாக பார்க்கையில், செப்டம்பரில், வேலைவாய்ப்பின்மை விகிதம் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 23.8 சதவீதமாக பதிவாகி உள்ளது. 
  • அதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில், 23.2 சதவீதமாகவும், திரிபுராவில் 17 சதவீதமாகவும் உள்ளது. ஹரியானாவில் 22.9 சதவீதமும், ஜார்க்கண்டில் 12.2 சதவீதமும், பீஹாரில் 11.4 சதவீதமாக உள்ளது.
  • நாட்டிலேயே சட்டீஸ்கரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.1 சதவீதமாக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து அசாமில் 0.4 சதவீதமும், உத்தர்காண்டில் 0.5 சதவீதமும் பதிவாகி உள்ளன. ம.பி.,யில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.9 சதவீதமாக உள்ளது. 
  • ஒடிசாவில் 2.9 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் பதிவாகி உள்ளது. இந்தியாவில் ஆகஸ்டில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்ததற்கு, மழைப்பொழிவு அதிகரித்து, விதைப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதே காரணமென கூறப்படுகிறது. இதன் தாக்கம், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மையிலும் எதிரொலித்தது. 
  • ஆகஸ்டில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7 சதவீதமாகவும், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel