மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்றது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய 7 அணிகள் ரவுண்டு ராபின் லீக் சுற்றில் மோதின.
லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.
இந்த நிலையில் மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியான இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனால் இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
0 Comments