Recent Post

6/recent/ticker-posts

36-வது தேசிய விளையாட்டு போட்டி - நாள் 1 / 36th NATIONAL SPORTS TOURNAMENT - DAY 1

  • 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் அசாமை சேர்ந்த மீராபாய் சானு 191 கிலோ எடையை (ஸ்நாட்ச் 84 கிலோ, கிளீன் & ஜெர்க் 107 கிலோ) தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். 
  • அசாம் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான சஞ்ஜிதா சானு 187 கிலோ எடையை தூக்கி (82+105) வெள்ளிப் பதக்கமும், ஒடிசாவின் ஸ்நேகா சோரன் 169 கிலோ எடையை தூக்கி (73+96) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
  • ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் சர்வீசஸ் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த தேவேந்தர் சிங் பந்தய தூரத்தை 01:26:25 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். 
  • உத்தராகண்டின் சூரஜ் பன்வார் (01:26:25 நிமிடங்கள்) வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த ஆகாஷ்தீப் சிங் (01:28:15 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
  • மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் குஜராத்தின் இளவேனில் வாலறிவன் 16-10 என்ற கணக்கில் கர்நாடகாவின் திலோத்தமாவை வீழ்த்தி தங்கம் வென்றார். மேற்கு வங்கத்தின் மெஹூலி கோஷ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 
  • ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகாராஷ்டிராவின் ருத்ராங்க் ஷ் பி. பாட்டீல் தங்கப் பதக்கமும், பஞ்சாப்பின் அர்ஜூன் பபுதா வெள்ளிப் பதக்கமும், மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பி.எஸ். தோமர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 
  • 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் ஹரியாணாவின் அனிஷ் தங்கம் வென்றார். உத்தராகண்டின் அங்குர் கோயல் வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப்பின் குர்மீத் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
  • ஆடவருக்கான நெட்பால் இறுதிப் போட்டியில் ஹரியாணா 75-73 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. தடகளத்தில் நேற்று 9 சாதனைகள் படைக்கப்பட்டது. 
  • மகளிருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் உத்தரப்பிரதேசத்தின் முனிதா பிரஜாபதி 01:38:20 நிமிடங்கள் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு ஷப்னா பந்தய தூரத்தை 1:40:35.00 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. முனிதாவின் தந்தை கட்டிட தொழிலாளி ஆவார். 
  • உத்தரகாண்டின் மான்ஷி நெகி (01:41:28 நிமிடங்கள்), ரேஷ்மா படேல் (01:42:10 நிமிடங்கள்) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சர்வீசஸ் அணியை சேர்ந்த பர்வேஜ் கான் பந்தய தூரத்தை 3:40.89 விநாடிகளில் கடந்து தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 1994-ல் புனேவில் நடைபெற்ற போட்டியில் பகதூர் பிரசாத் 3:43.57 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. 
  • மகளிருக்கான உயரம் தாண்டுதலில் மத்திய பிரதேசத்தின் ஸ்வப்னா பர்மான் 1.83 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். 
  • இதற்கு முன்னர் 2001-ல் பாபி அலாய்சியஸ் 1.82 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. தமிழகத்தின் கிரேஸ் கிளிஸ்டஸ் மெர்லி 1.81 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
  • ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் பர்வின் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் ரஞ்சித் மகேஸ்வரி 16.66 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. 
  • மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஹீட்ஸ் 1-ல் தமிழகத்தின் அர்ச்சனா பந்தய தூரத்தை 11:41 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
  • அசாமின் ஹிமா தாஸ் (11:81), ஆந்திராவின் ஜோதி யார்ராஜி (11:45), மகாராஷ்டிராவின் தியாந்திரா (11:57), ஒடிசாவின் டூட்டி சந்த் (11:58), மேற்கு வங்கத்தின் ஹிமாஸ்ரீ ராய் (11:59), ஒடிசாவின் சரபானி நந்தா (11:62), கர்நாடகாவின் தனேஷ்வரி (11:71) ஆகியோரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
  • வாள்வீச்சில் மகளிருக்கான சேபர் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் சி.ஏ.பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 15-3 என்ற கணக்கில் பஞ்சாப்பின் ஜக்மீத் கவுரை தோற்கடித்தார். 
  • தேசிய விளையாட்டில் அவர், தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளார். வாள்வீச்சில் ஆடவருக்கான ஃபாயில் பிரிவில் தமிழகத்தின் வேலாயுதம் வினோத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • மகளிருக்கான மல்யுத்தத்தில் 76 கிலோ எடைப்பிரிவில் உத்தரப்பிரதேசத்தின் திவ்யா கரன் தங்கம் வென்றார். ரக்பியில் ஆடவர் பிரிவில் ஹரியாணாவும், மகளிர் பிரிவில் ஒடிசாவும் தங்கம் வென்றன. 
  • சங்கிலி குண்டு எறிதலில் பஞ்சாப்பின் தம்னீத் சிங் 67.62 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2011-ல் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் ஹர்விந்தர் சிங் 66.79 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. 
  • மகளிருக்கான குண்டு எறிதலில் உத்தரப்பிரதேசத்தின் கிரண் பாலியன் 17.41 மீட்டர் தூரம் எறிந்து சாதனையுடன் தங்கம் வென்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel