Recent Post

6/recent/ticker-posts

அக்டோபர் 8, 2022 வரையில் நிதியாண்டு 2022-23க்கான நேரடி வரி வசூல் / DIRECT TAX UPTO OCTOBER 2022

  • அக்டோபர் 8, 2022 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக இலக்கம், தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 
  • இதன்படி மொத்த வசூல் ரூ. 8.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 23.8% அதிகம். 
  • நேரடி வரி வசூல், மொத்த ரீஃபண்டுகள் ரூ. 7.45 லட்சம் கோடியாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.3% அதிகமாக பதிவாகியுள்ளது. 
  • 2022-23 நிதி ஆண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் இந்த வசூல் 52.46% ஆகும்.
  • மொத்த வருவாய் வசூலில் பெருநிறுவன வருமான வரி (சி.ஐ.டி) மற்றும் தனிநபர் வருமான வரியின் (பி.ஐ.டி) வளர்ச்சியைப் பொறுத்தவரையில் சி.ஐ.டி 16.73%, பி.ஐ.டி 32.30% வளர்ச்சி அடைந்துள்ளன. 
  • ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8, 2022 வரை ரூ. 1.53 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய வருடத்தின் இதே காலகட்டத்தில் அளிக்கப்பட்ட தொகையை விட 81.0% அதிகம்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel