Recent Post

6/recent/ticker-posts

முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டம் / CHIEF MINISTER'S HELP DESK & INTEGRATED GRIEVANCE MANAGEMENT SCHEME

TAMIL
  • முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி அவர்களால் 13 பிப்ரவரி 2021 அன்று துவக்கப்பட்டது. 
  • இத்திட்டத்தை தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறை செயல்படுத்துகிறது. முதல் கட்டமாக, பொது மக்கள் தங்கள் குறைகளை, அரசுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண், 1100 வழியாக தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூர், இராஜிவ்காந்தி சாலையில் நுாறு இருக்கைகளுடன், முதல்வரின் உதவி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பொது மக்கள் தங்கள் குறைகளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இம்மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 
  • மேலும் CMHelpline.tnega.org மற்றும் cmhelpline@tn.gov.in போன்ற தமிழ்நாடு அரசின் இணையதளங்களில் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை இம்மையத்திற்கு தெரிவிக்கலாம். கூடுதலாக CMHelpline Citizen எனும், மொபைல் போன் செயலியை தரவிறக்கம் செய்தும் குறைகளை தெரிவிக்கலாம். 
  • இத்திட்டத்தில் பெறப்படும் பொதுமக்களின் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏற்பு, நிராகரிப்பு, மனுவின் தற்போதைய நிலை குறித்து குறுஞ்செய்திகள் வழியாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். 
  • பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து முதல்- அமைச்சர், அரசு தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சிததலைவர்கள் உரிய காலத்திற்குள் ஆய்வு மேற்கொள்ளப்படும்
  • Chief Minister's Assistance Center and Integrated Grievance Management Scheme, Tamil Nadu Chief Minister Edappadi K. Launched by Palaniswami on 13 February 2021. The scheme is implemented by the Department of Information Technology, Government of Tamil Nadu. 
  • In the first phase, a Chief Minister's Helpline Center has been set up with nine seats at Rajiv Gandhi Road, Choshinganallur, Chennai, so that the public can report their grievances to the government through the toll-free number 1100.
  • The general public can contact the center to report their grievances from 7 am to 10 pm. Also, the public can report their grievances to the center through the Tamil Nadu government websites like CMHelpline.tnega.org and cmhelpline@tn.gov.in. 
  • Additionally, complaints can also be reported by downloading CMHelpline Citizen, a mobile phone app. Appropriate action will be taken on the petitions of the public received under this scheme and the public will be informed about the acceptance, rejection and current status of the petition through text messages. 
  • The actions taken on the petitions received will be reviewed by the Chief Minister, Chief Secretary to Government, all Departmental Secretaries, Heads of Departments and concerned District Heads within due time.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel