Recent Post

6/recent/ticker-posts

ஐ.நா சூழல் பாதுகாப்பு மாநாடு - கோகோ கோலா நடத்த ஒப்பந்தம் / COCO COLA GET AGREEMENT TO HOST UN ENVIRONMENT CONFERENCE

  • காலநிலை மாற்றத்துக்கு தீர்வு காணும் வகையில் எகிப்து நாட்டில் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை காலநிலை மாற்ற மாநாடு (COP27) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல உலக நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
  • இந்த மாநாட்டை நடத்துவதற்கு ஐ.நா கோகோகோலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகில் அதிக அளவில் பிளாஸ்டிக் பாட்டில்களை உற்பத்தி செய்து மாசுபடுத்துதலில் முதல் இடத்தை பிடித்துள்ள கோகோகோலாவுடன் காலநிலை மாற்ற மாநாட்டிற்கு ஒப்பந்தம் செய்தது பல்வேறு சர்ச்சைகளை வெடிக்க செய்துள்ளது.
  • கோகோகோலா நிறுவனம் ஒரு ஆண்டில் 120 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ள கோகோகோலா நிறுவனம், கடலில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஐநாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும், மேலும் 2030-ம் ஆண்டிற்குள் தங்கள் நிறுவனத்தின் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும், 2050-ம் ஆண்டுக்குள் 100 சதவிகித கார்பன் வெளியீட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel