Recent Post

6/recent/ticker-posts

ககன்யான் / GAGANYAAN

TAMIL
  • ககன்யான் (Gaganyaan விண்கலம்) இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். 
  • இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது ஜி. எஸ். எல். வி மார்க் III மூலம் 2021 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படவுள்ளது. 
  • இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டமானது டிசம்பர் 18,2014 இல் நடைபெற்றது
வரலாறு
  • ககன்யானுக்கான தொடக்கநிலை ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் 2006 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 
  • முதலில் இதற்கு சுற்றுப்பாதை வாகனம் என்று பொதுப் பெயரிடப்பட்டது. இது மேர்க்குரித் திட்டம் போன்றே வடிவமைக்கத் திட்டமிடப்பட்டது. 
  • மேலும் கூடுதலாக ஒரு வாரம் விண்வெளியில் நீடித்திருக்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் மார்ச், 2008 இல் இந்திய அரசிடம் நிதி பெறுவதற்காக ஒப்படைக்கப்பட்டது. 
  • இந்திய மனித விண்வெளி ஆய்வுத் திட்டமானது இதற்கான இசைவாணையை பிப்ரவரி, 2009 இல் அளித்தது. பயணிகள் அல்லாத சோதனை ஓட்டமானது 2013 இல் நடத்தத் திட்டமிட்டுருந்தனர். பின் அது 2016 ஆம் ஆண்டாக மாற்றம் ஆனது.
நிதி மற்றும் உள்கட்டமைப்பு
  • திட்டத்தின் முன்னேற்பாடுகளுக்கு இந்திய அரசானது 500 மில்லியன்இந்திய ரூபாய்களை 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்காக வழங்கியது. 
  • பயணிகள் விண்கலமானது 7 ஆண்டுகள் விண்வெளியில் தங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்க 124 பில்லியன் இந்திய ரூபாய் தேவை என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய ஐந்தாண்டு திட்டத்திற்கான (2007–12). 
  • திட்டமிடலின் போது திட்டக்குழு உறுப்பினர்கள் 2007 ஆம் ஆண்டில் பயணிகள் விண்கலத்திற்கான முன்னேற்பாடுகளுக்காக 50 பில்லியன் இந்திய ரூபாய் தேவைப்படும் என மதிப்பிட்டனர்.
  • ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள்ளது. 
  • இந்த திட்டம் 7 நாட்கள் வரை சுற்றுப்பாதையில் இருக்கும். இது சோயூசு விண்கலம் போன்ற விண்கலம் ஆகும்.
ரஷ்யாவில் பயிற்சி
  • இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து, இந்தியாவின் இஸ்ரோ அமைப்பும், ரஷ்யாவின் க்ளாவ்கோஸ்மாஸ் (Glavkosmos) என்கிற அமைப்பும் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டன. 
  • இந்திய விமானப் படையின் ஒரு குரூப் கேப்டன் மற்றும் மூன்று விங் கமாண்டர்களைக் கொண்ட நான்கு பேர் இதற்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்கள். 
  • இவர்களுக்கான பயிற்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், கொரோனா பெருந்தொற்று தாக்கம் காரணமாக, அவர்களின் பயிற்சி தற்காலிகமாக தடைபட்டது. 
  • தற்போது மார்ச், 2021-இல் பயிற்சியை நிறைவு செய்த, இந்த அதிகாரிகளுக்கு இந்தியாவில் சிறப்பு விண்கலன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்
ENGLISH
  • Gaganyaan is an Indian spaceship that aims to send humans into low Earth orbit and bring them back safely to Earth. The spacecraft is designed to carry three people. 
  • This spacecraft of the Indian Space Research Center G. S. L. It will be launched in 2021 by the V Mark III. The test flight of the spacecraft, manufactured by Hindustan Aeronautics Limited, took place on December 18, 2014.
History
  • Preliminary studies and progress on technical facilities for Kaganyan began in 2006. At first it was generically named Orbital Vehicle. It was planned to be designed similar to the Mercury Project. 
  • It was also planned to be designed to last an additional week in space. The project was handed over to the Government of India in March, 2008 for funding. The Indian Human Space Program gave the go-ahead in February 2009. A non-passenger test run was planned for 2013. Then it changed to 2016.
Finance and Infrastructure
  • The Government of India provided INR 500 million for the years 2007 and 2008 for the development of the project. INR 124 billion was expected to be required to design the passenger spaceship capable of staying in space for 7 years for India Five Year Plan (2007–12). 
  • During planning, project team members estimated that 50 billion Indian rupees would be needed in 2007 for the development of the passenger space shuttle.
  • Kaganyan is a fully autonomous 3.7 ton spacecraft. It is designed to carry three people into orbit and back to Earth. The project will remain in orbit for up to 7 days. It is a Soyuz-like spacecraft.
Training in Russia
  • India's ISRO and Russia's Glavkosmos signed an agreement in June 2019 to train Indian astronauts. Four personnel comprising one Group Captain and three Wing Commanders of the Indian Air Force were selected and sent for training. 
  • While their training started on February 10 last year, due to the impact of the Corona pandemic, their training was temporarily interrupted. Currently completing training in March, 2021, these officers will be given specialized spacecraft training in India.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel