- குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற உள்ள 12வது பாதுகாப்புக் கண்காட்சியின் ஒரு பகுதியாக அக்டோபர் 18ஆம் தேதி இந்திய - ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தை சந்திப்பின்போது ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.
- இந்தியாவும், ஆப்பிரிக்காவும் நெருங்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவைக் கொண்டுள்ளன.
- கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட கம்பாலா கோட்பாடுகளால் ஆப்பிரிக்கா குறித்த இந்தியாவின் அணுகுமுறை வழி நடத்தப்படுகிறது.
- 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சியின் போது உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முதன் முதலில் இந்திய - ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் உச்சிமாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருப்பொருள் 2022
- ‘இந்திய ஆப்பிரிக்கா: ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து, வலுப்படுத்துவதற்கான உத்தியைக் கையாளுதல்' என்பது இந்தக் கூட்டத்தின் கருப்பொருளாகும்.
0 Comments