Recent Post

6/recent/ticker-posts

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் / NATIONAL RIVER LINKAGE PROJECT

TAMIL
 • தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் (Indian Rivers Inter-link) என்பது இந்தியாவிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் ஓர் அரசுத் திட்டம் ஆகும். 
 • இதன் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை நாட்டின் மற்ற வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் உன்னதத் திட்டமாகும்.
வரலாறு
 • இந்திய அரசின் தேசிய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் (அ) தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை (National Water Development Agency) இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து வருகிறது.
 • கடந்த 1972 ஆம் ஆண்டு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த டாக்டர். கே.எல்.ராவ் அவர்களின் சீறிய ஆய்வின் பேரில் முதன் முதலாக கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முன் வைக்கப்பட்டது.
கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்
 • இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இரண்டு பகுதிகளாக்ப் பிரிக்கப்பட்டுள்ளன.
இமாலய ஆறுகள் திட்டம்
 • இமயமலையிலிருந்து பாயும் ஆறுகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவற்றை இணைப்பது, கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை நதியை மகாநதி ஆறுடன் இணைப்பது.
தீபகற்ப ஆறுகள் திட்டம்
 • இந்திய தீபகற்பத்தின் வடக்கிலுள்ள மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளை தெற்கிலுள்ள கிருஷ்ணா மற்றும் காவேரி ஆறுகளுடன் இணைப்பது.
 • மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை இணைத்து அரபிக் கடலில் கலக்கும் உபரி நீரை கிழக்குப் பகுதியில் உள்ள வறண்ட பகுதிகளுக்குத் திருப்பி விடுவது.
பயன்கள்
 • விவசாயத்தை நம்பி உள்ள இந்திய நாட்டில் நீர்ப்பாசனத்திற்கு பெரும்பான்மையான விவசாயிகள் பருவ மழையையே நம்பியுள்ளனர். பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் வறட்சி ஏற்பட்டு உணவு உற்பத்திப் பாதிக்கப்படுகிறது. 
 • அதே காலத்தில் மற்ற பகுதிகளில் அதிக அளவு மழை பொழிந்து ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உபரி நீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றது.
 • இப்படி வீணாகும் நீரை வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதன் மூலம் பொதுமக்களுக்குக் குடிநீர் வசதியும், விவசாயத்திற்கான பாசன வசதியும் பெறமுடியும்.மற்றும் நீர் வழி போக்குவரத்து அதிகரிக்கும் ,மீன் பிடி தொழில் பெருகும் 
திட்ட முன்னேற்றம்
 • தேசிய அளவிலான நதிநீர் இணைப்புத் திட்டத்தில் இன்னும் எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் எற்படவில்லை.
 • ஆனால் மாநில அளவில் நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள் அந்தந்த மாநில அரசுகளினால் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
 • குஜராத் அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைக்கும் முயற்சியை ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறது.
 • தமிழ்நாடு அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது.
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள கால தாமதத்திற்காகச் சொல்லப்படும் காரணங்கள்
 • இதற்குத் தேவையான மிகப் பெரிய செலவுத் தொகை
 • இமாலய நதிகளை இணைப்பதை ஆட்சேபிக்கும் அந்நதிகளினால் பயன்பெறும் அண்டை நாடுகள்
 • சுற்றுச் சூழல் மற்றும் மக்களுக்கான பாதிப்பு
 • மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு
 • Indian Rivers Inter-link is a government project to link the rivers flowing within India. This is a noble project to divert the surplus water that is wasted in the sea during floods to other dry parts of the country.
History
 • The National Water Development Authority (a) National Water Development Agency (NWA) under the Ministry of National Water Resources of the Government of India has been exploring the feasibility of implementing this project for more than 30 years.
 • Dr. who was the Union Minister of Irrigation in 1972. The Ganga-Caveri Link Project was first put forward on the basis of KL Rao's rapid study.
Ganga - Cauvery Link Project
 • The feasibility of implementing the scheme is divided into two parts.
Himalayan Rivers Project
 • Connecting the Himalayan rivers Ganga and Brahmaputra, connecting the eastward flowing Ganges with the Mahanadi River.
Peninsular Rivers Project
 • Connecting the Mahanadi and Godavari rivers in the north of peninsular India with the Krishna and Kaveri rivers in the south.
 • Connecting west-flowing rivers and diverting excess water from mixing with the Arabian Sea to arid areas in the east.
Uses
 • In India, which is dependent on agriculture, the majority of farmers depend on monsoon rains for irrigation. When the monsoons fail, droughts occur and food production is affected. At the same time, in other parts of the country, heavy rain falls and the rivers flood and the excess water goes wastefully into the sea.
 • By diverting this wasted water to dry areas, the public can get drinking water and irrigation facilities for agriculture, and water transport will increase and fishing industry will increase.
Project progress
 • No significant progress has been made yet on the national level water connectivity project.
 • But efforts to link the rivers at the state level have been initiated by the respective state governments.
 • The Gujarat government has started an initiative to link the rivers flowing in its state and is succeeding in it.
 • The Government of Tamil Nadu has started the implementation of the project of interlinking the rivers flowing in the state.
Reasons given for delay in implementation of National Water Linkage Scheme
 • A very large amount of expenditure is required for this
 • Neighboring countries benefiting from these rivers object to interlinking of Himalayan rivers
 • Impact on environment and people
 • Inter-State Co-ordination

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel