Recent Post

6/recent/ticker-posts

விமானப்படையில் ஆயுத அமைப்புக் கிளை - மத்திய அரசு ஒப்புதல் / Ordnance Organization Branch in the Air Force - Central Government approval

  • இந்திய விமானப்படையின் (ஐஏஃப்) வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஆயுத அமைப்புகள் (டபிள்யூஎஸ்) கிளை என்ற புதிய கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆயுத அமைப்பின் கிளையை உருவாக்கியதன் நோக்கம்மே அனைத்து ஆயுத அமைப்பு நிபுணர்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதே ஆகும். 
  • இது அனைத்து தரை, வான்வழி ஆயுத அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 
  • தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் ஆளில்லா விமானம் மற்றும் இரட்டை விமானிகள், படையினர் பலர் பயணிக்கும் விமானம் ஆகியவற்றில் ஆயுத அமைப்பை இயக்கும் தொகுப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இந்தக் கிளை இருக்கும்.
  • இந்திய விமானப் படையின் போர்த் திறனை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தக் கிளை தனது மகத்தான பங்களிப்பை வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel