Recent Post

6/recent/ticker-posts

தீசாவில் புதிய விமானப்படை தளம் - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் / PM MODI LAYS FOUNDATION FOR NEW AIR FORCE AT DEESA

  • குஜராத்தின் காந்திநகரில், பாதுகாப்புத்துறை கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீசா என்ற இடத்தில் அமையும் விமான படை தளத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 
  • வட மேற்கு பிராந்தியத்தில் ராஜஸ்தானில் உள்ள பரோடி, குஜராத்தின் புஜ், நாளியா ஆகிய இடங்களில் விமான தளங்கள் உள்ளன. விமான தளம் அமைய உள்ள தீசா பாக். எல்லையில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது. 
  • குஜராத்தின் அகமதாபாத்,பாவ் நகர் மற்றும் வதோதராவில் பெரிய,பெரிய தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மிர்பூர் காஸ், ஐதராபாத் போன்ற இடங்களில் எப்.16 போர் விமானங்களை அந்த நாடு நிறுத்தி உள்ளது. 
  • எனவே, குஜராத் தொழிற்சாலை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். அதை தடுக்கவும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதிலடி கொடுக்கவும் தீசாவில் புதிய தளம் அமைக்கப்பட உள்ளது. 
  • தீசாவில் விமான தளம் செயல்படும்போது பாகிஸ்தானின் ஐதராபாத், கராச்சி, சுக்கூர் போன்ற நகரங்களை இந்திய விமானங்கள் எளிதில் தாக்கி அழிக்க முடியும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel