ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் / Prime Minister Modi dedicated the AIIMS hospital built in Bilaspur, Himachal Pradesh to the nation
ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி 2017- ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார்.
பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இதில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு அறுவை சிகிச்சை மையங்கள், 750 படுக்கைகள், 64 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன.
மேலும் 24 மணி நேர அவசர சிகிச்சை, டயாலிசிஸ் வசதிகள் அல்ட்ராசோனோகிராபி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற நவீன இயந்திரங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
அம்ரித் மருந்தகம், 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிரிவு உள்ளிட்டவை மருத்துவமனையில் இடம் பெற்றுள்ளன.
0 Comments