Recent Post

6/recent/ticker-posts

உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயில் புனரமைப்பு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi dedicated the reconstruction of Ujjain Maha Kaleshwar Temple

  • நாட்டில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா காலேஸ்வர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். 
  • இந்நிலையில் இந்த கோயிலை `மகா காலேஸ்வர் லோக்' என்ற பெயரில் ரூ.850 கோடியில் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.
  • இதைத் தொடர்ந்து கோயிலுக்கு அருகேயுள்ள ருத்ரசாஹர் ஏரிப் பகுதியில், 900 மீட்டர் நீளத்துக்கு மிகப்பெரிய பிரகாரமும், அதைச்சுற்றி 200 சிலைகளும், சிவன், சக்தி சிலைகளும் அமைக்கப்பட்டன. மேலும் சுவர்களில் கடவுள்களின் சுவரோவியங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
  • இதைத் தொடர்ந்து நந்தி துவார் மற்றும் பினாக்கி துவார் என்ற 2 நுழைவுவாயில்களும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் பக்தர்கள் கோயிலின் நுழைவு வாயிலில் சென்று சாமி தரிசனம் செய்து பிரகாரத்துக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • சுண்ணாம்புக் கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்ட 108 தூண்கள் பிரகாரத்தில் நிறுவப்பட்டுள்ளன. பிரகாரத்தையொட்டி அழகான நீர் ஊற்றுகள், சிவபுராணத்தை கூறும் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
  • ஒட்டுமொத்தமாக ஸ்ரீ மகா காலேஸ்வர் லோக் புனரமைப்புத்திட்டத்தின் மதிப்பு ரூ.856 கோடியாகும். தற்போது, முதல்கட்டமாக ரூ.316 கோடிக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து 900 மீட்டர் தூரத்துக்கு பிரகாரம் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
  • மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தையும் பிரதமர் மோடி அர்ப்பணித்து வைத்தார். இதைத் தொடர்ந்து கோயிலில் பிரதமர் மோடி வழிபட்டார்.
  • நிகழ்ச்சியில் ஆளுநர் மங்குபாய் பட்டேல், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel