பள்ளிக் குழந்தைகளை நல்வழியில் செல்ல வகை செய்யும் சிற்பி திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனிச் சீருடை வழங்கப்பட உள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக சிற்பி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது ரூ.4.25 கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 100 பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லொழுக்கம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். காவல் துறை அதிகாரிகளும், துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் பயிற்சி வகுப்புகளை நடத்துவர். இதற்கென பிரத்யேகமாக புத்தகம் வழங்கப்படும்.
சத்தான உணவு
சிற்பி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 5,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக் கப்படும். அதில், மாணவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764. மாணவிகள் 2 ஆயிரத்து 236. மொத்தம் 5 ஆயிரம் பேர்.
இந்தத் வழங்கப்படும். திட்டத்தின் நோக்கமாக சில பண்புநலன்கள் வடித்தெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சமத்துவ உணர்வு, மதச்சார்பற்ற கண்ணோட்டம் மற்றும் விசாரணை மனப்பான்மையுடன் கூடிய தலைமைப் பண்புகளை வளர்த்தல், காவல் துறை எவ்வாறு சமூகத்துடன் இணைந்து செயல்படுகிறது என்பதை கவனிக்கச் செய்தல், வகுப்புவாதம், போதை பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்துக்கு எதிராக மாணவர்களை உருவாக்குதல் ஆகியன திட்டத்தின் நோக்கங்களாகும். இந்தத் திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு தனிச் சீருடை வழங்கப்படும்.
பாட வேளையின் போது, முளை கட்டிய பயறு வகைகள், இனிப்பு கொழுக்கட்டை, பழங்கள் ஆகியன சிற்றுண்டிகளாக வழங்கப்படும்.
கவாத்துப் பயிற்சி, போக்குவரத்து விதிகள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், பேரிடர் கால முன்னெச்ச ரிக்கை குறித்தும் விளக்கப்படும்.
மேலும், மாணவ, மாணவிகள் சென்னையில் புகழ்பெற்ற எட்டு இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவர்.
0 Comments