TAMIL
- தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம் என்பது தமிழ்நாட்டில் பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டம் ஆகும்.
செய்தியாளர் அடையாள அட்டை
- ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் என்கிற அளவிலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள், 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்க்குச் செய்தியாளர் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
பத்திரிகையாளர் அங்கீகார அட்டை
- சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோருக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்கப்படுகிறது.
பயன்கள்
- அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்
- ரயில் பயணங்களில் 50 சதவிகித கட்டணச் சலுகை,
- ரயில் பயணங்களில் முன்னுரிமைப் பதிவுகள்
- தொலைபேசி இணைப்புப் பெறுவதில் முன்னுரிமை
- வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு
ENGLISH
- The Tamil Nadu Government Journalists Scheme is a welfare scheme implemented by the Tamil Nadu Government Press and Public Relations Department for journalists working in newspapers and television companies in Tamil Nadu.
- 2 reporters, 1 photographer for each newspaper company and 2 reporters, 2 cameramen, 2 camera assistants for private television company are issued press cards.
- 9 reporters, 2 photographers per newspaper in Chennai and 2 reporters, 1 photographer per newspaper in other districts are issued press credentials.
- Free travel in government buses
- 50% fare concession on train journeys,
- Priority bookings on train journeys
- Priority in getting telephone connection
- Special allotment in housing board flats on priority basis
0 Comments