Recent Post

6/recent/ticker-posts

உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு: ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல்' தீர்மானம் / Territorial Integrity of Ukraine: Safeguarding the Principles of the Charter of the United Nations' resolution

  • உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போருக்குப்பின், உக்ரைனின் சில பகுதிகளான டோனட்ஸ்க், கெர்ஸன், லுஹன்ஸ்க், ஜபோரிஹியா ஆகிய பகுதிகளை இணைத்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்தது.
  • இந்த இணைப்பு சட்டவிரோதம் என உக்ரைன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன. ஆனால், ரஷ்யா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இதையடுத்து, ஐ.நா.பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வரைவுத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
  • அதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா இணைத்தது சட்டவிரோதமானது எனக் கூறி ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து 'உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு: ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல்' தீர்மானம் முன்மொழியப்பட்டது.
  • இந்த தீர்மானத்துக்கு ஆதராவாக ஐ.நா. சபையில் 143 நாடுகள் வாக்களித்தன. ஆனால், ரஷ்யா, பெலாரஸ், வடகொரியா, சிரியா, நிகரகுவா ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்தன. 
  • இந்தியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel