ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சஜன் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றாா்.
இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்திருக்கிறாா். கிரேக்கோ ரோமன், 77 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற சஜன் முதல் சுற்றில் 3-0 என்ற கணக்கில் லிதுவேனியாவின் அய்ஸ்டிஸ் லியாக்மினாஸை வென்றாா்.
ஆனால், அடுத்த சுற்றில் மால்டோவாவின் அலெக்ஸாண்ட்ரின் குட்டுவிடம் தோல்வி கண்டாா். எனினும், குட்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் அடிப்படையில் சஜனுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைத்தது.
அதில் முதலில் கஜகஸ்தானின் ரஸுல் ஜுனிஸை வீழ்த்திய சஜன், வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் உக்ரைனின் டிமிட்ரோ வாசெட்ஸ்கியை தோற்கடித்து பதக்கம் பெற்றாா்.
இதனிடையே, 72 கிலோ பிரிவு அரையிறுதியில் தோற்ற விகாஸ், ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு பெற்று அதில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் களம் காண்கிறாா். இதேபோல், 60 கிலோ பிரிவில் சுமித்தும் வெண்கலப் பதக்க சுற்றுக்கு முன்னேறியிருக்க, 67 கிலோ பிரிவில் அஷு தகுதிச்சுற்றிலேயே தோற்று வெளியேறினாா்.
ஆண்களுக்கான 'கிரிகோ ரோமன்' பிரிவு போட்டிகள் நடந்தன. 72 கிலோ பிரிவில் இந்திய வீரர் விகாஸ், பங்கேற்றார். இதன் அரையிறுதிக்கு முன்னேறிய விகாஸ், 0-9 என குரோஷியாவின் பாவெலிடம் வீழ்ந்தார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜப்பானின் தயகோவை சந்தித்தார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட விகாஸ், 6-0 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார். நிதேஷ் அபாரம்97 கிலோ பிரிவில் இந்தியாவின் நிதேஷ், காலிறுதியில் 0-8 என ஹங்கேரியின் அலெக்சிடம் வீழ்ந்தார். பின் வெண்கலப் பதக்கத்துக்கான 'ரெப்பிசேஜ்' வாய்ப்பு கிடைத்தது. இதன் முதல் போட்டியில் 0-10 என செர்பியாவின் லுகாவை வென்றார்.
அடுத்து பிரேசிலின் இகோர் பெர்னாண்டோவை சந்தித்தார். இதில் நிதேஷ் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் கைப்பற்றினார். இதுவரை இந்திய அணி 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
பைனலில் அன்குஷ்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் அன்குஷ் பங்கேற்றார். அரையிறுதிக்கு முன்னேறிய அன்குஷ், எகிப்தின் நடா மெதானியை சந்தித்தார். இதில் 8-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
0 Comments