Recent Post

6/recent/ticker-posts

உலக துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் சாகர் / USSF WORLD SHOOTING CHAMPIONSHIP SAKAR WINS SILVER

  • எகிப்தில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் ஜூனியர் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சாகர் டாங்கி (588 புள்ளி), வருண் தோமர் (583) முறையே முதலிரண்டு இடங்களை பிடித்து, 'ரேங்கிங்' சுற்றுக்குள் நுழைந்தனர். 
  • இதில் அபாரமாக ஆடிய சாகர், 253.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் வருண், 251.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 
  • பைனலில் சாகர், சீனாவின் ஜின்காங் மோதினர். இதில் ஏமாற்றிய சாகர் 12-16 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
  • இதுவரை 10 தங்கம், 7 வெள்ளி, 11 வெண்கலம் என, 28 பதக்கங்களை அள்ளிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் சீனா (23 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம்) உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel