நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக 1952 துவக்கத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. பனி மூட்டம், பலத்த மழை போன்ற மோசமான வானிலை காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன், 1951 இறுதியில் ஹிமாச்சல் மாநிலத்தில் தேர்தல் நடந்தது.
இதில், முதல் ஓட்டைச் செலுத்திய பெருமைக்கு உரியவர் ஷ்யாம் சரண் நேஹி. ஹிமாச்சலின் கின்னாவூர் மாவட்டம் கல்பாவில், முதல் ஓட்டை செலுத்தியபோது அவருக்கு வயது 34.
இதற்கு பின் இதுவரை நடந்த அனைத்து லோக்சபா, சட்டசபை மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் நேஹி, தவறாமல் தன் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
இதுவரை 34 தேர்தல்களில் அவர் ஓட்டளித்துள்ளார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் விளம்பர துாதராகவும் நேஹி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நேஹி, வயது மூப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
0 Comments