Recent Post

6/recent/ticker-posts

வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ. 7,183.42 கோடி / 14 states as revenue deficit subsidy of Rs. 7,183.42 crore

  • மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள செலவினத் துறை வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 7,183.42 கோடியை 14 மாநிலங்களுக்கு இன்று விடுவித்தது.  15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, இந்த மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. 
  • நடப்பு நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு ரூ. 86,201 கோடியை வழங்குமாறு 15 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.  12 மாத தவணைகளாக இதனை வழங்க செலவினத்துறை பரிந்துரை அளித்துள்ளது. 
  • 2022 நவம்பர் மாதத்தில் 8-ஆவது தவணையுடன் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.57,467.33 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திரப்பிரதேசம், அசாம், இமாச்சலப்பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இந்த மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel