Recent Post

6/recent/ticker-posts

ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது / INDIA HAS BEEN GIVEN LEADERSHIP OF G20

  • லகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி - 20 கூட்டமைப்பின் மாநாடு, ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.
  • இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாலி சென்றார். அங்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். 
  • 'ஜி - 20' அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பதுடன், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜி - 20 மாநாட்டையும் இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது.
  • அடுத்த ஆண்டு செப்., 9 மற்றும் 10ம் தேதிகளில், ஜி - 20 மாநாடு புதுடில்லியில் நடக்க உள்ளது. இதையடுத்து, பாலி மாநாட்டின் இரண்டாம் நாளான இறுதி நிகழ்வாக, ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 
  • பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ மாநாட்டு தலைமை பொறுப்பை ஒப்படைத்தார். இந்நிலையில், டிச., 1ம் தேதி முதல், ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.
  • மாநாட்டு நிறைவு அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:உலகம் முழுதும் புவிசார் பதற்றம், பொருளாதார மந்தநிலை, உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஜி - 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel