Recent Post

6/recent/ticker-posts

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2014 / NEW MEDICAL INSURANCE SCHEME 2014

TAMIL

  • புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம், 2014 (New Health Insurance Scheme, 2014) என்பது, தமிழ்நாடு அரசின் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் மருத்துவ நலனுக்காகத் தமிழக அரசால் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். 
  • அரசு ஊழியர்களுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு மாற்றாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • இத்திட்டம் 1-07-2014 முதல் நடைமுறையானது. இத்திட்டத்தை, இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான யுனைட்டட் இந்தியா இன்சூரன்சு நிறுவனம், தமிழ்நாடு அரசின் முகவராக இருந்து செயல்படுத்துகிறது. 
  • யுனைடெட் இந்தியா இன்சூரன்சு நிறுவனம் மற்றும் பயனாளிகளுக்கிடையே மூன்றாம் நபர் நிர்வாகியாக (Third Party Administrator) எம்டி. இந்தியா ஹெல்த் கேர் நிறுவனம் (MD India Health Care Services Pvt., Ltd.,) இருந்து செயல்படும்.
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சலுகைகள்
  • இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், ஆசியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்தம் கணவர் / மனைவி மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்.
  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகபட்ச வரம்பாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை, அரசு ஒப்புதல் பெற்ற மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தாமல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.
  • இத்திட்டத்தின்படி மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்படும்
  • New Health Insurance Scheme, 2014 (New Health Insurance Scheme, 2014) is a new health insurance scheme introduced by the Government of Tamil Nadu in 2014 for the medical benefit of Tamil Nadu Government employees, teachers and retirees and family pensioners. 
  • The scheme has been introduced to replace the existing medical insurance scheme for government employees. The scheme is effective from 1-07-2014. 
  • The scheme is implemented by the United India Insurance Company, a public sector insurance company of the Government of India, acting as an agent of the Government of Tamil Nadu.
  • MD is the Third Party Administrator between United India Insurance Company and the beneficiaries. Operated by MD India Health Care Services Pvt., Ltd.
Benefits in the new health insurance plan
  • Government employees, Asians, pensioners and their spouses and family pensioners will be benefited through this scheme.
  • Government employees, teachers and retired government employees, teachers can undergo medical treatment free of charge in government approved hospitals up to a maximum limit of Rs.two lakhs.
  • Under this scheme, medical insurance identity cards will be issued to all

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel