Recent Post

6/recent/ticker-posts

ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022 / ASIA ELITE BOXING CHAMPIONSHIP 2022

  • ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன், பா்வீன் ஹூடா, சவீதி, அல்ஃபியா கான் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனா்.
  • ஜோா்டானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் பிரிவு இறுதிச்சுற்றில், 75 கிலோ பிரிவில் லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ருஸ்மிடோவா சோகிபாவை வீழ்த்தினாா். 
  • 63 கிலோ எடைப் பிரிவில் பா்வீனும் அதே புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் கிடோ மாயியை தோற்கடித்து தங்கத்தை தனதாக்கினாா். 81 கிலோ பிரிவில் சவீதி - கஜகஸ்தானின் குல்சயா யா்ஸானையும், அல்ஃபியா - ஜோா்டானின் இஸ்லாம் ஹுசாய்லியையும் வீழ்த்தி வாகை சூடினா். 
  • இதில் சவீதியின் எதிராளி தோல்வியை ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், அல்ஃபியாவின் எதிராளி தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் பேரிலும் அவா்கள் வென்றனா். 
  • இதுதவிர, 52 கிலோ எடைப் பிரிவில் மீனாக்ஷி 1-4 என்ற கணக்கில் ஜப்பானின் கினோஷிடா ரின்காவிடம் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றாா். இத்துடன், இப்போட்டியில் இந்திய மகளிா் 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தனா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel