நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 165 எம்.பி.க்களை தவிர விகிதாச்சார முறைப்படி 110 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடந்தது.
அதே நேரம் 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 உறுப்பினர்களை தவிர 220 பேர் விகிதாசார முறைப்படியும் தேர்தல் நடந்தது.
நாடு முழுதும் உள்ள 1.79 கோடி வாக்காளர்களுக்கு 22 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன; 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது.
ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முழுமையான முடிவை அறிவிக்க தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று வரையிலான நிலவரப்படி 110 இடங்களில் ஆளும் நேபாள காங்கிரஸ் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இக்கட்சியைச் சேர்ந்த ஷேர் பகதுார் துபா மீண்டும் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
0 Comments