Recent Post

6/recent/ticker-posts

உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடர் 2022 / WORLD SNOOKER CHAMPIONSHIP 2022

  • துருக்கியில், உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் வித்யா பிள்ளை 44, பெல்ஜியத்தின் வெண்டி ஜான் மோதினர். 
  • முதல் செட்டை 19-63 என இழந்த வித்யா, பின் எழுச்சி கண்டு அடுத்த இரு செட்களை 64-19, 65-16 எனக் கைப்பற்றினார். நான்காவது செட்டில் ஏமாற்றிய இவர், 19-56 எனக் கோட்டைவிட்டார். பின், 5வது செட்டை 64-52 என வென்ற வித்யா, அடுத்த இரு செட்களை 34-66, 2-62 என இழந்தார்.
  • முடிவில் தமிழகத்தின் வித்யா 3-4 (19-63, 64-19, 65-16, 19-56, 64-52, 34-66, 2-62) என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றினார். 
  • இதன்மூலம் உலக ஸ்னுாக்கரில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த 2வது இந்திய வீராங்கனையானார். இதற்கு முன், 2016ல் இந்தியாவின் அமீ கமணி 2வது இடம் பிடித்திருந்தார். 
  • 'மாஸ்டர்' பிரிவு பைனலில் இந்தியாவின் மனன் சந்திரா 3-5 (63-52, 23-82, 42-59, 30-62, 59-18, 40-73, 85-25, 49-58) என, வேல்சின் டேரன் மார்கனிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel