ஆந்திரா மற்றும் தெலங்கான மாநிலங்களுக்கு ரூ.523 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் / Road projects worth Rs 523 crore approved for Andhra and Telangana states
தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மற்றும் பூபாளப்பட்டினம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு வழி சாலையை, ரூ.136 கோடி செலவில் மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதேபோல், தெலங்கானா மாநிலத்தின் நாகர்குர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே தனித்துவம் வாய்ந்த பாலம் அமைத்தல், நெடுஞ்சாலையை (என்எச்-167கே) மறுசீரமைத்து தரம் உயர்த்துவது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.436 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஹைதராபாத் முதல் திருப்பதி, நந்தியாலா, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் 80 கிலோ மீட்டர் அளவுக்கு குறையும்.
0 Comments