Recent Post

6/recent/ticker-posts

தீன்தயாள் அந்தியோதய யோஜனா-தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் / DEENDAYAL ANDYODAYA YOJANA - NATIONAL URBAN LIVELIHOOD MOVEMNENT (DAY - NULM)

TAMIL
  • அடித்தட்டு அளவில் ஏழைகளுக்கான வலுவான நிறுவன அமைப்புகளை உருவாக்கித் தருவதன் மூலம் நகர்ப்புர ஏழைக் குடும்பங்களின் ஏழ்மை மற்றும் நலிவுற்ற தன்மையினைக் குறைத்து, இலாபம் தரக்கூடிய சுயவேலை வாய்ப்பு மற்றும் திறன் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர வழிவகை செய்து அதன் பயனாக தொடர் வாழ்வாதார மேம்பாட்டினை உறுதி செய்வதே தீன்தயாள் அந்தியோதய யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) நோக்கமாகும். 
  • இத்திட்டம் 2014-15 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  • மத்திய அரசு திட்டமான தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் 2015-16 ஆம் ஆண்டு முதல் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 60:40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கூறுகள்
  • சமூக அணி திரட்டல் மற்றும் நிறுவன மேம்பாடு (SM&ID)
  • திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி (CB&T)
  • திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்குதல் (EST&P)
  • சுய வேலைவாய்ப்பு திட்டம் (SEP)
  • நகர்புற தெரு வியாபாரிகளுக்கு வாழ்வாதாரம் (SUSV)
  • நகர்புற வீடற்றோருக்கு உறைவிடம் (SUH) மற்றும் புதிய முயற்சிகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் (1&SP) என்ற பிரத்தியேகத் திட்டக் கூறினையும் கொண்டுள்ளது
  • அரசாணை (நிலை) எண். 62, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (ந.நி.2) துறை, நாள் 04.03.2016ன் படி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தினை செயல்படுத்திடும் அலகாக நகராட்சி நிர்வாக ஆணையகரகத்திலிருந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • இவ்வாணையின் அடிப்படையில் இத்திட்டத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ள முதல் நான்கு முக்கிய திட்டக் கூறுகள் (SM&ID, CB&T, EST&P மற்றும் SEP) 2016-17ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  • மீதமுள்ள மூன்று திட்டக் கூறுகள் நகராட்சி நிர்வாக ஆணையகரகத்தினால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ENGLISH
  • Deendayal Andyodaya Yojana-National Urban Livelihood Movement (DAY-NULM) aims to reduce poverty and vulnerability of urban poor families by creating strong institutional structures for the poor at the grassroots level, providing opportunities for gainful self-employment and skilled employment, thereby ensuring continuous livelihood improvement. is the purpose. 
  • This scheme has been implemented since 2014-15. 
  • The National Urban Livelihood Initiative, a central government scheme, has been implemented since 2015-16 by the central and state governments on a 60:40 funding ratio basis.
The components of the National Urban Livelihoods Movement
  • Social Mobilization and Institutional Development (SM&ID)
  • Skill Development and Training (CB&T)
  • Creating Employability through Skill Training and Employment Training (EST&P)
  • Self Employment Scheme (SEP)
  • Livelihood for Urban Street Vendors (SUSV)
  • It also has a special scheme called Shelter for Urban Homeless (SUH) and New Initiatives and Special Schemes (1&SP).
  • Ordinance (Status) No. 62, Municipal Administration and Drinking Water Supply (N.N.2) Department, dated 04.03.2016 has been changed from Municipal Administration Commission to Tamil Nadu Women Development Corporation as the implementing unit of National Urban Livelihoods Movement. 
  • Based on this order the first four major program components (SM&ID, CB&T, EST&P and SEP) of the scheme are being implemented by the Tamil Nadu Women's Development Corporation from the year 2016-17. 
  • The remaining three project components are being implemented by the Municipal Administrative Commission.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel