Recent Post

6/recent/ticker-posts

அரசு தாய்ப்பால் வங்கி திட்டம் / GOVERNMENT BREAST MILK BANK SCHEME

TAMIL

நோக்கம்
  • அரசு தாய்ப்பால் வங்கி திட்டம் அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 200 லிட்டர் தாய்ப்பால் வரை சேமிக்க முடியும்.
முதல் வங்கி
  • முதன்முறையாக அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. சோதனைத் திட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த வங்கிச் சேவை வெற்றி அடைந்ததால், மகப்பேறு மருத்துவமனை உள்பட ஏழு மருத்துவமனைகளில் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மகப்பேறு மருத்துவமனை
  • மகப்பேறு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 700 புறநோயாளிகள், 95 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்; தினசரி சுமார் 50 பிரசவங்கள் நடைபெறுகின்றன.
  • ஓர் ஆண்டுக்கு சுமார் 14,000 முதல் 18,000 பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆசியாவிலேயே அதிக பிரசவங்கள் இந்த மருத்துவமனையில் தான் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்ப்பால் வங்கி
  • தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்த பின் அவை 200 மி.லி. அளவுள்ள புட்டிகளில் அடைக்கப்பட்டு பதப்படுத்தும் கருவியில் பொருத்தப்படும். ஒரு முறைக்கு 2.4 லிட்டர் பாலை பதப்படுத்த முடியும். 
  • பாலில் கிருமித் தொற்று இருந்தால் அதை நீக்கும் வகையில் 62.5 டிகிரியில் 30 நிமிஷங்கள் தாய்ப்பால் பதப்படுத்தப்படும். பதப்படுத்தப்பட்ட பின்னும் பாலில் கிருமித் தொற்று உள்ளதா என்று மீண்டும் பரிசோதிக்கப்படும். 
  • கிருமித் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின் அது சேமித்து வைக்கப்படும். 200 லிட்டர் தாய்ப்பால் சேமிக்கும் வசதி மருத்துவமனையில் உள்ளது. சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலை சேமித்து வைக்க முடியும்.
குறை மாதம்
  • குறை மாதத்தில் அல்லது எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதாரண பிரசவத்தில் குழந்தை பெற்ற தாயின் பாலை வழங்க முடியாது. எனவே அத்தகைய தாய்மார்களின் பாலையும், சாதாரணமாக பிரசவம் நடைபெற்ற தாய்மார்களின் பாலையும் தனித்தனியாக சேமிக்க வசதி உள்ளது.
  • தாயும், குழந்தையும் வெவ்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தால் தாயிடம் இருந்து பாலை சேகரித்து தேவைப்படும் போது குழந்தைக்கு வழங்க முடியும். 
  • தாய்மார்களிடம் உபரியாக இருக்கும் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு தேவையுள்ள வேறு குழந்தைகளுக்கும் வழங்க முடியும். ரத்த தானத்தைப் போன்று தானம் செய்ய விருப்பமுள்ள தாய்மார்கள் தாய்ப்பாலை தானமளிக்க முடியும்.
பயனாளிகள்
  • தாய்ப்பால் சுரக்காத அல்லது குறைவாகச் சுரக்கும் தாய்மார்களின் குழந்தைகள், எச்ஐவி, ஹெபடைடிஸ் பி, சி பாதிப்புள்ள தாய்மார்களின் குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தானம் பெறும் தாய்ப்பாலை வழங்க முடியும்.
  • பொதுமக்கள் விரும்பினால் ஒரு மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதம் மூலம் வங்கியில் உள்ள தாய்ப்பாலைப் பெற்றுப் பயன்படுத்தலாம்

Purpose

  • Government breast milk bank scheme has been started in all maternity hospitals. This bank can store up to 200 liters of breast milk.
First Bank
  • Breast milk bank was first started in February 2014 at Government Children's Hospital. The banking service, which was started as a pilot project, has been successful and banks have been started in seven hospitals including the maternity hospital.
Maternity Hospital
  • About 700 outpatients and 95 inpatients are treated in the maternity hospital per day; About 50 deliveries take place daily.
  • About 14,000 to 18,000 deliveries take place in a year. It is noteworthy that most deliveries in Asia take place in this hospital.
Breast Milk Bank
  • After collecting breast milk from the mothers they used 200 ml. Packed into sized pods and fitted into processing equipment. It can process 2.4 liters of milk at a time. The milk is processed for 30 minutes at 62.5 degrees to remove any bacterial infection in the milk. 
  • Even after processing, the milk is retested for bacterial contamination. It is stored after it is confirmed that it is free of germs. The hospital has a 200 liter breast milk storage facility. Breast milk can be stored for about three to six months.
Premature
  • Premature or low birth weight babies cannot be given breast milk in a normal delivery. Therefore, there is a facility to store the milk of such mothers and the milk of normal delivery mothers separately.
  • If the mother and baby are receiving treatment at different locations, milk can be collected from the mother and given to the baby when needed. 
  • Surplus breast milk from mothers can be collected and distributed to other children in need. Like blood donation, mothers who wish to donate can donate breast milk.
Beneficiaries
  • Children of non- or low-breastfeeding mothers, children of mothers infected with HIV, Hepatitis B, C, and adopted children can provide donated breast milk.
  • The public can obtain and use banked breast milk with a referral letter from a medical officer

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel