• சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனா். 
  • நிகழாண்டு சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை நிரந்தரமாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
  • அதனடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மரப் பலகைகளால் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையானது 263 மீ நீளமும், 3 மீ அகலமும் கொண்டது.
  • இதில் மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்வதற்காக 11 மீட்டா் நீளத்தில், 6 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அைக்கப்பட்டுள்ளன. 
  • மேலும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக பாதையானது கடற்கரை ஓரம் 22 மீட்டா் நீளத்தில், 5 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
  • மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பறை வசதிகளும், அவா்கள் பயன்படுத்துகின்ற வகையில் சக்கர நாற்காலிகள் வைப்பதற்காக கன்டெய்னா் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.