Recent Post

6/recent/ticker-posts

வட்டார இணைப்புத் திட்டம் - உடான் / UDE DESH KA AA NAAGRIK - UDAN

TAMIL
  • வட்டார இணைப்புத் திட்டம் (Regional Connectivity Scheme) அல்லது உதான் (UDAN - Ude Desh ka Aam Naagrik, UDAN-RCS இந்திய அரசின் வட்டார வானூர்தி நிலையங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்குமானத் திட்டமாகும். 
  • இதன் நோக்கமாக "நாட்டின் பொதுக் குடிமகன் பறந்திடுக" எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது; இதன்மூலம் வான்பயணம் பரவலாகவும் அனைவருக்கும் தாங்கத் தக்கதாகவும் இருக்கும். 
  • தவிரவும் தேசியப் பொருளியல் மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பிற்கும் இந்தியாவின் அனைத்து வட்டாரங்களிலும் மாநிலங்களிலும் வான் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படவும் வழிகோலும். 
  • இந்தத் திட்டத்தின் துவக்கத்தின்போது 486 வானூர்தி நிலையங்களில், 406 பயன்படுத்தப்படாத நிலையங்களாக இருந்தன.
  • இந்தியாவிலுள்ள பயன்படுத்தப்படாத அல்லது குறைவாக பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்படாத 425 வானூர்தி நிலையங்களில் வட்டார வானூர்தி நிலையங்களை மேம்படுத்தியும் இயக்கத்திற்கு கொணர்ந்தும் இத்திட்டம் வான்பயணத்தை ஊக்குவிக்கும்.
திட்டம்
  • இந்தத் திட்டம் இரு அங்கங்களை உடையது. முதல் அங்கமாக ஏற்கெனவே உள்ள வட்டார வானூர்தி நிலையங்களை மேம்படுத்துவதும் புதிய நிலையங்களை அமைப்பதுமாகும். 
  • குடிசார் பறப்புகளை இயக்க ஏற்கெனவே இருந்த 70இலிருந்து (மே 2016இல் மொத்தமாக, படைத்துறை வானூர்தி நிலையங்கள் உட்பட, 98 இயக்கத்திலிருந்தன) குறைந்தது 150ஆக (திசம்பர் 2018 இலக்கு) உயர்த்துவது இதன் இலக்காகும். 
  • துவக்கத்தில் 100க்கும் கூடுதலான முழுமையாக பயன்படுத்தாத மற்றும் பயன்படுத்தாத வட்டார வானூர்தி நிலையங்களை திசம்பர் 2018க்குள் மேம்படுத்துவதை இலக்காக கொண்டு அதன் பகுதியாக 50 வட்டார வானூர்தி நிலையங்கள் அமைக்க ₹45,000 மில்லியன் நிதியம் முதலீடு மே 2017இல் அங்கீகரிக்கப்பட்டது. 
  • முதல் சுற்றில் எடுக்கப்பட்ட 70 வானூர்தி நிலையங்களில் 43 புதிய நிலையங்களாகும். இதில் 13 நிலையங்கள் இயங்கத் தொடங்கி உள்ளன. மேலும் 12 நிலையங்கள் தயாராகி உள்ளன. 18 குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை எதிர்நோக்கியுள்ளன. 
  • இரண்டாவது அங்கத்தில் பயணக்கட்டணத்தின் உச்சநிலை கட்டுபடுத்தப்பட்ட, நிதிசார் செயல்படுத்தத்தகு பல புதிய வட்டார பறப்புத் தடங்களை கட்டமைத்து முதல் அங்கத்தில் தயாரான 100 சிறு நகரங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதும் பெரும் நகரங்களுடன் பிணைப்பு ஏற்படுத்துவதுமாகும். 
  • தேவையான தடங்களில் செயல்படுத்தத்தகு பற்றாக்குறை நிதியம் (VGF) பயன்படுத்தப்படும். செயல்படுத்தத்தகு பற்றாக்குறை நிதியத்தின் நடுவண் அரசு பங்காக வழங்க பரவலான வழித்தடங்களில் பறக்கும் வான்சேவைகளுக்கு மேல்வரி வசூலிப்பதாகும். தொடர்புள்ள மாநில அரசுகளும் வான்சேவையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கவிருக்கின்றன
செயலாக்கம்
  • உதான் முதல் சுற்று ஏப்ரல் 2017இல் 5 வான்சேவை நிறுவனங்களுக்கு 70 வானூர்தி நிலையங்களை இணைக்க 128 பறப்புத் தடங்கள் வழங்கப்பட்டன; 
  • இதன்மூலம் மொத்தமாக இயக்கத்தில் உள்ள குடிசார்வானூர்தி நிலையங்களின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. இதில் பல தடங்கள் நவம்பர் 2017இலும் மற்றவை திசம்பர் 2017இலும் செயற்பாட்டிற்கு வந்தன. 
  • உதான்-இரண்டாம் சுற்றுக்கு 2017 திசம்பர் இறுதியில் புதிய வழித்தடங்கள் வழங்கப்பட உள்ளன; 17 நிறுவனங்களிடமிருந்து 502 புதிய வழித்தடங்களுக்கான 141 முன்மொழிவுகள் வந்துள்ளன.
  • திசம்பர் 2017இல் வானூர்திகளின் எண்ணிக்கை 395இலிருந்து 38% உயர்ந்து 548 ஆக உள்ளது. 
  • ஆண்டுக்கு புதியதாக 50 வானூர்திகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த கட்டங்களில் கடல்சார் வானூர்திகளும் சேர்க்கப்படும். 
  • ஸ்பைஸ் ஜெட் 12 இருக்கைகள் கொண்ட நிலம் நீரில் செல்லக்கூடிய 100 கடல்வானூர்திகளை வாங்க US$400 மில்லியன் பெறுமதிப்புள்ள வேட்டலாணை விடுத்துள்ளது (திசம்பர் 2017).
  • Regional Connectivity Scheme or UDAN (UDAN - Ude Desh ka Aam Naagrik, UDAN-RCS) is a scheme of the Government of India for the development and improvement of Regional Airports. 
  • Its objective is "to make the common citizen of the country fly", thereby making air travel widespread and affordable for all. Apart from this, it will also lead to national economic development, employment and improvement of air transport infrastructure in all regions and states of India.Out of 486 aerodromes, 406 were unused at the time of initiation of this project.
  • The scheme will promote air travel by upgrading and operationalizing regional airports out of 425 unused or under-utilized non-upgraded airports in India.
Project
  • This project has two components. The first component is the upgrading of existing regional airports and construction of new ones. The aim is to increase the number of civil flights from the existing 70 (in May 2016 a total of 98 operational, including military aerodromes) to at least 150 (December 2018 target). 
  • An investment of ₹45,000 million was approved in May 2017 to set up 50 regional airports as part of it, with an initial target of upgrading over 100 underutilized and underutilized regional airports by December 2018. 
  • Out of the 70 airports selected in the first round, 43 are new. Out of which 13 stations have started functioning. 12 more stations are ready. 18 expected significant improvement.
  • The second phase is to connect the 100 small cities prepared in the first phase by building several new regional air routes with maximum fare control and financial viability and linking them with major cities. 
  • The Viable Deficit Fund (VGF) will be used on necessary tracks. An intermediate government share of operational deficit funding is to levy a surcharge on air services flying over a wide range of routes. The concerned state governments are also going to provide additional benefits to the vansevaks
Processing
  • UTHAN first round April 2017 awarded 128 runways to connect 70 airports to 5 airlines; With this, the total number of public transport stations in operation has increased to 106. 
  • Many of these tracks became operational in November 2017 and others in December 2017. New routes to be provided by end of December 2017 for Uttaran-second round; 141 proposals for 502 new routes were received from 17 companies.
  • The number of aircraft has increased by 38% to 548 from 395 in December 2017. 50 new aircraft are being added every year. Seaplanes will also be added in subsequent phases. SpiceJet bid for 100 12-seat land-seaplanes worth US$400 million (December 2017).

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel