சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Vande Bharat Train between Chennai - Mysore - Prime Minister Narendra Modi inaugurated
பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் அவரை வரவேற்றனர்.
பின்னர் விதான சவுதாவுக்கு காரில் சென்று, அங்கு கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெங்களூரு ரயில் நிலையத்துக்கு சென்ற அவர், பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் நாட்டின் 5-வதும், தென்னிந்தியாவின் முதலாவதுமான சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற மோடி ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைத்தார்.
தொங்கும் பூங்காவைப் போல கண்ணை கவரும் வகையில் 2,55,645 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட முனையத்தை பிரதமர் பார்வையிட்டார்.
0 Comments