Recent Post

6/recent/ticker-posts

நவம்பர் மாதம் 2022 - ஜிஎஸ்டி வரி வசூல் / GST REVENUE ON NOVEMBER 2022

  • கடந்த நவம்பர் மாதத்தில் 1,45,867 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தை விட 11% அதிகம்.
  • நவம்பர் மாத வசூலில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரி வருவாய் ரூ.10,433 கோடியாகவும் உள்ளது.
  • நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் 8,551 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தை விட தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 10% அதிகரித்துள்ளது.
  • புதுச்சேரியில் நவம்பர் மாதத்தில் 209 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தை விட புதுச்சேரி மாநிலத்தில் 22 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் அதிகமாகும்.
  • மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.21,611 கோடி ஜிஎஸ்டி வருவாய் ஈட்டி, நவம்பர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
  • மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 9ஆவது மாதமாக ரூ.1.4 லட்சத்தை தாண்டி வசூலாகியுள்ளது. வழக்கமான பகிர்ந்தளிப்புக்கு பின்னர் நவம்பர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.59,678 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.61,189 கோடியும் கிடைத்துள்ளது. 
  • இவை தவிர நவம்பர் மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.17 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel