Recent Post

6/recent/ticker-posts

சா்வதேச பாட்மின்டன் சம்மேளனத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாரா பாட்மின்டன் வீராங்கனை விருது / IBF Best Para Badminton Player Award 2022

  • சா்வதேச பாட்மின்டன் சம்மேளனத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாரா பாட்மின்டன் வீராங்கனை விருதை இந்தியாவின் மனீஷா ராமதாஸ் வென்றுள்ளாா்.
  • 17 வயதான மனீஷா, நடப்பாண்டில் அனைத்து போட்டிகளிலுமாக 11 தங்கம், 5 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறாா். 
  • இதில் உலக சாம்பியன்ஷிப்பில் எஸ்யு5 பிரிவில் வாகை சூடியதும் அடக்கம். இந்த விருதுக்கான போட்டியில் மற்ற இந்திய வீராங்கனைகளான நித்யஸ்ரீ சுமதி, மானசி ஜோஷி ஆகியோரும் இருந்தனா். 
  • சிறந்த பாரா வீரா் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்தும் போட்டியில் இருந்த நிலையில், அந்த விருது டபிள்யூஹெச்2 உலக சாம்பியனும், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் டாய்கி கஜிவாராவுக்கு கிடைத்தது. 
  • மாற்றுதிறனாளிகள் அல்லாத சாதாரண போட்டியாளா்கள் பிரிவில் ஆடவா் தரப்பில் ஒலிம்பிக் சாம்பியனும், டென்மாா்க் வீரருமான விக்டா் அக்ஸெல்சென் சிறந்த வீரா் விருது பெற்றாா். 
  • அதற்கான போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் பெயரும் இருந்தது. சிறந்த வீராங்கனை விருதை ஜப்பானின் அகேன் யமகுச்சி வென்றாா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel