Recent Post

6/recent/ticker-posts

25வது கிழக்கு மண்டல கவுன்சிலின் கூட்டம் / 25TH EASTERN ZONAL COUNCIL MEETING

TAMIL

  • மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 25வது கூட்டம் நேற்று நடைபெற்றது. 
  • உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஒடிசா அமைச்சர் பிரதீப் அமாத் மற்றும் 5 மாநில உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
  • இந்த கூட்டத்தில், எல்லையில் சட்டவிரோத ஊடுருவல், எல்லை தாண்டிய கடத்தல், இந்திய-வங்கதேச எல்லை பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 
  • மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து வசதிகள், நீர் பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஜார்கண்ட் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் மற்றும் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 
  • கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டனர்.
ENGLISH
  • The 25th meeting of Eastern Zone Council was held yesterday in Kolkata, West Bengal. The meeting was chaired by Home Minister Amit Shah and was attended by West Bengal Chief Minister Mamata Banerjee, Jharkhand Chief Minister Hemant Soran, Bihar Deputy Chief Minister Tejashwi Yadav and Odisha Minister Pradeep Amat and 5 state Home Ministry officials.
  • In this meeting, issues of illegal border infiltration, cross-border smuggling and damage to India-Bangladesh border were discussed.
  • Inter-state transport facilities, water distribution etc. were also discussed. Also discussed were measures to curb Maoist movement and Maoist dominance in Jharkhand, Odisha and West Bengal.
  • Bihar Chief Minister Nitish Kumar and Odisha Chief Minister Naveen Patnaik abstained from attending the Eastern Zone Council meeting.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel